மஞ்சள் தெளித்து ‘தீட்டு கழித்த’ பாஜக மகளிர் அணி – புதுச்சேரி போலீஸில் காங். மகளிர் அணி தலைவி புகார்

0
20

காங். மகளிர் அணி தலைவிக்கு எதிராக, மஞ்சள் தெளித்து தீட்டு கழித்ததாக புதுவை பாஜக மகளிரணி சார்பில் சமூக வலை தளங்களில் வீடியோ பரவி வருகிறது. இது தன்னை அவமான படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் மகளிரணி தலைவி போலீ ஸில் புகார் அளித்துள்ளார்.

டெல்லியில் நடந்த ஏஐ மாநாட்டில், இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனை கண்டித்து புதுச்சேரியில் பாஜக இளை ஞரணி சார்பில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பு கடந்த 20-ம் தேதி போராட்டம் நடத்தினர். அவர்கள் ராகுல் உருவ பொம்மையை தீயிட்டனர்.

இதற்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸார், பாஜக தலைமை அலுவலகம் அருகே பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்து நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக-காங்கிரஸ் தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இந்த பிரச்சினைக்கு பிறகு, புதுவை பாஜக மகளிரணியினர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், பாஜக அலுவலக வாயில் பகுதியை அவர்கள் மஞ்சள் தண்ணீர் தெளித்து, தண்ணீர் ஊற்றி கழுவும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதில், புதுவை மாநில காங்கிரஸ் தலைவியை கடுமையாக விமர்சித்து பாஜக மகளிரணி நிர்வாகி ஒருவர் பேசியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மகளிர் அணியினர் வெளியிட்டுள்ள வீடி யோவில் கூறியிருப்பதாவது: புதுவை காங்கிரஸ் மகளிர் அணி தலைவி, பாஜக அலுவலகம் பகுதிக்கு வந்து சென்ற தால், மஞ்சள் தண்ணீர் ஊற்றி தீட்டு கழித்துள்ளோம். நாங்கள் இல்லாத போது எங்கள் (பாஜக) அலுவலக பகுதிக்கு வந்து சென்றுள்ளார். காங்கிரஸ் மகளிர் அணி தலைவி உண்மையான வராக இருந்தால், இனி நேருக்கு நேர் வந்து மோதி பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் மகளிரணி தலைவி நிஷா நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பாஜக என்னை அவமானப் படுத்திய செயலால், காங்கிரஸ் கட்சியை விட்டும், அரசியலை விட்டும் போய்விடுவேன் என் றும், மனம் தளர்ந்து, வீட்டோடு உட்கார்ந்துவிடுவேன் என்பதும் கண்டிப்பாக நடக்காது. நான் என்னுடைய அரசியல் பயணத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்.

உங்களை போன்று காசு வாங்கிக்கொண்டு கட்சி வேலை செய்பவர் நான் இல்லை. என்னிடம் உங்களால் போட்டிபோட முடியவில்லை. சாதி ரீதியான,

மத ரீதியான, தமிழ் கலாச்சாரத்துக்கு புறம்பான தீட்டு கழித்தல் என்ற செயலை செய்திருப்பது ஏற்க முடியாதது.

பெண்கள் என்ன மாதிரியானவார்த்தைகளை பயன்படுத்தி பேசக்கூடாதோ, பெண்களுக் குரிய உரிமைகளை அரசியல் வாதிகள் எந்தளவுக்கு பொது மக்களிடம் பேச வேண்டும் என்பதையெல்லாம் செய்யாமல் தனி நபரான என் மீது தாக்குதல் நடத்துவது தவறு.

நாங்கள் காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தி தைரியமாக உங்களை எதிர்த்து போராட்டம் செய்தோம். உங்களின் மிரட்டல்கள் என்னிடம் எடுபடாது என்று தெரிவித்தார். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் மகளிரணி தலைவி நிஷா, முத்தியால்பேட்டை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், மஞ்சள் தண்ணீர் தெளித்து தீட்டு கழித்ததாக என்னை அவமதித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here