‘4த் ஃப்ளோர்’ படத்தை ஒரே ஜானருக்​குள் அடக்க முடியாது! – இயக்​குநர் தகவல்

0
26

‘வை​கை’, ‘தீர்க்​கதரிசி’ படங்​களை இயக்​கிய எல்.ஆர்.சுந்தர​பாண்டி அடுத்து இயக்​கி​யுள்ள படம், ‘4த் ஃப்ளோர்’. ஆரி ஆர்​ஜுனன், தீப்​ஷி​கா, பவித்​ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோ கிரியேஷன் சார்​பில் ஏ. ராஜா தயாரித்​துள்​ளார்.

ஜே.லக் ஷ்மண் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். தரண்​கு​மார் இசையமைத்​துள்ள இப்​படம் பிப்​.27-ல் வெளி​யாகிறது. இதன் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் சேரன், சுசீந்திரன், விஜய் மில்​டன், சுப்​பிரமணி​யம் சிவா, நடிகர்கள் பரத், பிரஜின், தயாரிப்​பாளர் தனஞ்​செயன் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

படத்​தின் இயக்​குநர் எல்​.ஆர்​.சுந்​தர​பாண்டி பேசும்​ போது, “இப்​படத்​தின் கதையை ஒரே ஜானருக்​குள் அடக்க முடியாது. முதலில் கேட்​கும்​போது இது ஹாரர் மாதிரி தோன்​றலாம்; அடுத்த நிமிடம் த்ரில்​ல​ராக மாறும். அதற்குள் காமெடி​யும் கலந்து வரும். அதனால் ‘இது என்ன ஜானர்?’ என்று கேட்​டால், ஒரே வார்த்​தை​யில் சொல்ல முடியாத படம்” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here