சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் 2028 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி!

0
158

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, ஜிம்பாப்வே, ‘சி’ பிரிவில் இருந்து மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, ‘டி’ பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்த 8 அணிகளும் வரும் 2028-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறும் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

2028-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரை இணைந்து நடத்துவதால் ஆஸ்திரேலிய அணிக்கும் நேரடியாக தகுதி பெறும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 2028-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடருக்கு 9 அணிகள் தற்போது வரை நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

பொதுவாக 12 அணிகள் நேரடியாக டி 20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும். இந்த வகையில் மீதம் உள்ள 3 அணிகள் வரும் மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி ஐசிசி அணிகள் தரவரிசையில் உயர்நிலையில் உள்ள அணிகள் தேர்வாகும்.

அநேகமாக இந்த 3 இடங்களையும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் பெறக்கூடும். ஏனெனில் கட்-ஆஃப் தேதிக்கு முன்னர் அவர்களின் தரவரிசையை மாற்றக்கூடிய அளவிலான சர்வதேச போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இதுதவிர மீதம் உள்ள 8 இடங்கள் தகுதி சுற்றின் வாயிலாக நிரப்பப்படும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here