தெருக்களுக்கு திருச்சி லோகநாதன், ‘சீர்காழி’, எம்எஸ்வி பெயர்: பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

0
21

பின்​னணி பாடகர்​கள் திருச்சி லோக​நாதன், சீர்​காழி கோவிந்​த​ராஜன், இசையமைப்​பாளர் எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் ஆகியோரின் பெயர்களை, அவர்​கள் வசித்த தெருக்களுக்கு சூட்​டி, அதன் பெயர் பலகைகளை முதல்​வர் ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: பழம்​பெரும் பின்​னணிப் பாடகரும், தமிழக அரசின் கலை​மாமணி விருதும், அண்​ணா​வால் இசைத்​தென்​றல் பட்​டம் பெற்​றவரும், 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட திரைப்​பாடல்​களைப் பாடிய​வரு​மான திருச்சி லோக​நாதனின் கலைச்​சேவையை சிறப்​பிக்​கும் வகை​யில் அவர் வசித்​து​வந்த மந்​தைவெளிப்​பாக்​கம் நார்ட்​டன் 3-வது தெருவுக்கு ‘திருச்சி லோக​நாதன் தெரு’ என்று பெயர் சூட்​டப்​பட்​டு, பெயர்ப் பலகையை முதல்​வர் நேற்று திறந்து வைத்​தார்.

அதே​போல், வெண்​கலக்​குரல் வளமிக்க பாடகர், சங்​கீத சேவகர் பத்ம சீர்​காழி கோவிந்​த​ராஜனின் நினை​வாக அவர் வசித்த மந்​தைவெளிப்​பாக்​கம் கிழக்கு வட்​டச் சாலைக்கு ‘சீர்​காழி கோவிந்​த​ராஜன் சாலை’ என்று பெயர் சூட்​டப்​பட்​டுள்​ளது.

மேலும், கடந்த 70 ஆண்​டு​களாக தனது இன்​னிசை​யால், மெல்​லிசை​யால் மகிழ்​வித்​து, தமிழ் மக்​களின் நினை​வில் நீங்கா இடம்​பெற்​றவரும், தமிழ்த்​தாய் வாழ்த்​துக்கு இசையமைத்​து, 1970-லிருந்து இன்​றும் அரசு மற்​றும் கல்​விச் சாலைகளில் தமிழ்த்​தாய் வாழ்த்​தினை முழங்​கச் செய்​தவரும், 6 முதல்​வர்​களு​டன் பணிபுரிந்த பெரு​மைக்​குரிய​வரு​மான மெல்​லிசை மன்​னர் எம்​.எஸ். விஸ்​வ​நாதனை சிறப்பிக்​கும் வகை​யில், அவர் வசித்து வந்த டிமாண்டி சாலைக்கு ‘எம்​.எஸ். விஸ்​வ​நாதன் சாலை’ என்று பெயர் சூட்​டப்​பட்​டுள்​ளது.

இவற்​றின் பெயர்ப்பலகைகளையும் முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார். இந்​நிகழ்​வில், அமைச்​சர் கே.என்​.நேரு, மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, துணைமேயர் மு.மகேஷ் குமார், தலை​மைச் செயலர் நா. முரு​கானந்​தம், நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் தா.​கார்த்​தி​கேயன், மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் மற்​றும் திருச்சி லோக​நாதன், சீர்​காழி கோவிந்​த​ராஜன், எம்​.எஸ்​.​ விஸ்​வ​நாதன் ஆகியோரின் குடும்​பத்​தினரும் பங்​கேற்​றனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here