சென்னை | மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்கம்

0
21

மாநகர் போக்​கு​வரத்து கழகம் வெளி​யிட்ட செய்திக் குறிப்பு: எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரண​மாக சென்னை கடற்​கரை – தாம்​பரம் – செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் இயக்​கப்​படும் புறநகர் மின்​சார ரயில்​களின் சேவை​யில் வரும் பிப்​. 20 முதல் ஏப்​ரல் 5 வரை 45 நாட்​களுக்கு மாற்​றம் செய்யப்​பட்​டுள்​ளது.

மாநகர் போக்​கு​வரத்து கழகம் தற்​போது ராயபுரம் தற்​காலிக பேருந்து நிலை​யத்​தில் இருந்து தாம்​பரம், கிளாம்​பாக்​கம் வழி​யாக கூடு​வாஞ்​சேரி வரை இயக்​கப்​படும் தடம் எண். இ18-ல் 16 பேருந்​துகளும், கிளாம்​பாக்​கம் வரை இயக்​கப்​படும் தடம் எண்​. 18ஏ-ல் 28 பேருந்​துகள் என 44 பேருந்​துகள் தற்​போது இயக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், பிப்​.20 முதல் ஏப்​.5ம் தேதி வரை ராயபுரம் தற்​காலிக பேருந்து நிலை​யத்​தில் இருந்து 35 பேருந்​துகள் கிளாம்​பாக்​கம் வரை​யும், பல்​லா​வரத்​திலிருந்து தாம்​பரம் வழி​யாக செங்​கல்​பட்டு வரை 15 பேருந்​துகள் என மொத்​தம் 50 பேருந்​துகள் வழக்​க​மாக இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக இயக்​கப்பட உள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here