தமிழகம் வளர்ச்சி மாநிலமாக தொடர துணை நிற்க வேண்டும்: ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ விழாவில் இளைஞர்களுக்கு முதல்வர் அழைப்பு

0
20

தமிழகம் வளர்ச்சி மாநில​மாக தொடர இளைஞர்​கள் துணை நிற்க வேண்​டும். அடுத்து அமைய இருக்​கும் திரா​விட மாடல் 2.0 ஆட்​சி​யில் இன்​னும் பல திட்​டங்​கள் வரிசை கட்ட இருக்​கின்றன என்று ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்​நாடு’ விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

தமிழக இளைஞர் நலன், விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை சார்​பில் ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்​நாடு’ விழா சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இந்த விழா​வில், விளை​யாட்டு வீரர்​களுக்​கான 3 சதவீத இடஒதுக்​கீட்​டின் கீழ் 62 மாற்​றுத் திறன் விளை​யாட்டு வீரர்​கள் உள்​ளிட்ட 178 விளை​யாட்டு வீரர்​களுக்கு பணி நியமன ஆணை​களை​யும், 1,172 விளை​யாட்டு வீரர்​களுக்கு ரூ.33.50 கோடி ஊக்​கத் தொகைக்​கான காசோலைகளை​யும், தமிழ்​நாடு சாம்பியன்ஸ் அறக்​கட்​டளை நிதி​யில் இருந்து விளை​யாட்டு வீரர்​கள், வீராங்​க​னை​களுக்கு நிதி​யுதவி​களை​யும் முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார்.

தொடர்ந்​து, சென்​னை​யில் முதல்​கட்​ட​மாக ரூ.261 கோடி மதிப்​பீட்​டில் அமைக்​கப்​பட​ உள்ள சர்​வ​தேச விளை​யாட்டு நகரத்​துக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: கடந்த நான்​கரை ஆண்​டு​களில் தேசிய மற்​றும் சர்​வ​தேச அளவில் பதக்​கங்​களை வென்ற 5,406 விளை​யாட்டு வீரர்​களுக்கு ரூ.177.80 கோடி உயரிய ஊக்​கத்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது. மாற்​றுத் திறன் விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களுக்​கும், மற்ற விளை​யாட்டு வீரர்​களுக்கு இணை​யாக இந்த தொகையை நாம் வழங்கி வரு​கிறோம். இதி​லும் நாம்​தான் இந்​தி​யா​வுக்கே முன்​னோடி.

இது​வரை 241 மாற்​றுத் திறன் விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.29.67 கோடி உயரிய ஊக்​கத்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது. இது​வரை மொத்​தம் 6,578 வீரர்​களுக்கு ரூ.211.39 கோடி ஊக்​கத் தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு சாம்​பியன் பவுண்​டேஷன் மூல​மாக, விளை​யாட்டு வீரர்​களுக்கு தேவை​யான உபகரணங்​கள் வாங்​க​வும், அவர்​கள் சர்​வ​தேச விளை​யாட்​டில் பங்​கேற்​க​வும், இதுதொடர்​பான இதர செல​வு​களுக்​கும், இது​வரை 4,231 பேருக்​கு, ரூ.30.21 கோடி நிதி​யுதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

அரசுத் துறை​கள், பொதுத்​துறை நிறு​வனங்​களில், 3 சதவீதம் விளை​யாட்டு இடஒதுக்​கீட்​டில் வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்டு வரு​கிறது. 2021-ம் ஆண்​டுக்கு முன்பு விளை​யாட்டு இடஒதுக்​கீட்​டில் வெறும் 5 பேர்​தான் பணி​யமர்த்​தப்​பட்டு இருந்​தனர். ஆனால், நாம் ஆட்​சிக்கு வந்து 5 மாற்​றுத் திறன் வீரர்​கள் உட்​பட, மொத்​தம் 116 பேரை பல்​வேறு பொதுத்​துறை நிறு​வனங்​கள், அரசுத் துறை​களில் பணி​யமர்த்தி உள்​ளோம்.

2021-ம் ஆண்​டுக்கு முன்​பு, எலீட், மீம்ஸ் மற்​றும் சிடிஎஸ் திட்​டத்​தின்​கீழ் பயன்​பெற்ற விளை​யாட்டு வீரர்​கள் 162 பேர் மட்​டுமே. அதை​யும் நாம் வந்து 375 ஆக உயர்த்தி உள்​ளோம். தமிழகம் தொடர்ந்து அமை​தி​யான, வளர்ச்சி பெற்ற மாநில​மாக இருக்க வேண்​டும் என்​றால், அது, அரசி​யல் தலை​வர்​களான எங்​கள் கையில் மட்​டும் இல்​லை, இளைஞர்​களான நீங்​களும் எங்​களுக்கு துணை​யாக நிற்க வேண்​டும்.

அடுத்​து, அமைய இருக்​கும் திரா​விட மாடல் 2.0-ல் இன்​னும் பல திட்​டங்​கள் வரிசை கட்டி வர இருக்​கிறது. நாங்​களும் வென்று வரு​வோம். நீங்​களும்​ தொடர்ந்​து வென்​று வாருங்​கள்​. இவ்​வாறு முதல்​வர்​ பேசி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here