டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பேற்பு

0
24

தமிழக அரசு துறை​களுக்​கான ஊழியர்​களை தேர்வு செய்​யும் பணியை டிஎன்பிஎஸ்சி எனப்​படும், தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மேற்​கொண்டு வரு​கிறது.

அந்த வகை​யில், சார்​-ப​தி​வாளர், உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், சிறைத்​துறை நன்​னடத்தை அலு​வலர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர் உள்​ளிட்ட பதவி​களுக்​கான குரூப்-2 மற்​றும் குரூப்-2 மெயின் தேர்​வு​கள் கடந்த 8-ம் தேதி காலை​யும், பிற்​பகலும் நடை​பெறு​வ​தாக இருந்​தன.

ஆனால், அன்​று காலை​யில் சென்​னை​யில் 3 தேர்வு மையங்​களில் தேர்​வர்​களுக்கு இடங்​கள் ஒதுக்​கு​வ​தில் குளறு​படி ஏற்​பட்​ட​தால் அத்​தேர்​வு​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதைத் தொடர்ந்து, மெயின் தேர்​வு​கள் மார்ச் 15-ம் தேதிக்கு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளன.

தேர்வு மைய ஒதுக்​கீடு குளறு​படி விவ​காரத்​தில் முதல்​கட்ட விசா​ரணையை தொடர்ந்து 5 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். ஒரு துணை செய​லா​ளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இதன் தொடர் நடவடிக்​கை​யாக தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ஏ.சண்​முகசுந்​தரம் மாற்​றப்​பட்டு அப்​ப​தவிக்கு பி.ஸ்ரீ வெங்கட பிரியா நியமிக்​கப்​பட்டு அவர் கடந்த 14-ம் தேதி பொறுப்​பேற்​ற​தாக டிஎன்பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால்​ தெரி​வித்​துள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here