போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு, அண்ணப்பிளவு சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த மையம்

0
23

போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்துவமனையில் உதடு மற்​றும் அண்​ணப்​பிளவு சிகிச்​சைக்கு ஒருங்​கிணைந்த மையம் திறக்​கப்​பட்​டுள்​ளது.

சென்​னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்துவமனையில், கடந்த 20 ஆண்​டு​களுக்கு மேலாக உதடு மற்​றும் அண்​ணப்​பிளவு சிகிச்சை இலவச​மாக வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், உதடு மற்​றும் அண்​ணப்​பிளவு சார்ந்த சிகிக்​சைக்கு ஒருங்​கிணைந்த மையம் நேற்று திறக்​கப்​பட்​டது. ஸ்ரீராமச்​சந்​திரா கல்வி மற்​றும் மருத்​துவ அறக்​கட்​டளை​யின் அறங்​காவலர் சம்​யுக்தா வெங்​க​டாசலம் மற்​றும் துணைவேந்​தர் மருத்​து​வர் உமாசேகர் ஆகியோர் முன்​னிலை​யில், இந்த சிறப்பு மையத்தை அகில பாரத மகிளா சேவா சமாஜத்​தின் நிர்​வாக இயக்​குநர் மருத்​து​வர் துஷ்யந்த் பிர​சாத் திறந்து வைத்​தார்.

நிகழ்​வில், மருத்​து​வர் துஷ்யந்த் பிர​சாத் பேசுகை​யில், “இந்​தியா முழு​வதும் 28 மையங்​களில் உதடு, அண்​ணப்​பிளவு சிகிச்​சைக்​காக நிதி உதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது. தமிழகத்​தில் இத்​தகைய நிதி ஆதர​வுடன் செயல்​படும் முதல் சிகிச்சை மையம் இது​வாகும்” என்​றார்.

ஸ்ரீராமச்​சந்​திரா உதடு மற்​றும் அண்​ணப்​பிளவு சிகிச்சை ஒருங்​கிணைந்த மையத்​தின் இயக்​குநர் மருத்​து​வர் நவீன் குமார் பேசுகை​யில் “கனடா​விலுள்ள தனி​யார் தொண்டு நிறு​வன​மான டிரான்​ஸ்ஃ​பார்​மிங் ஃபேசஸ், இந்​தி​யா​விலுள்ள அகில பாரத மகிளா சேவா சமாஜம் இணைந்து வழங்​கும் நிதி உதவி​யால், ஏழை குழந்​தைகளுக்கு இலவச​மாக சிகிச்சை வழங்க முடிகிறது.

இந்த சிகிச்சை மையம், அனைத்து துறை​களின் நிபுணர்​கள் அடங்​கிய ஒருங்​கிணைந்த மைய​மாக விளங்​கும். கர்ப்ப காலத்​தில் இரும்​புச்​சத்து, ஊட்​டச்​சத்து குறை​பாடு, உறவினர்​களுக்​குள் திரு​மணம் செய்து கொள்​வது மற்​றும் கர்ப்ப காலத்​தில் மது அருந்​துதல் போன்​றவை உதடு மற்​றும் அண்​ணப்​பிளவு தோன்​று​வதற்கு முக்​கிய காரண​மாகும்” என்று தெரி​வித்​தார்.

இந்​நிகழ்​வில், துணைவேந்​தர் மருத்​து​வர் மகேஷ் வக்​க​முடி, பதி​வாளர் மருத்​து​வர் எஸ்​.செந்​தில்​கு​மார். பல்​மருத்​து​வக்​கல்​லூரி தலை​வர் மருத்​து​வர் எச்​.தமிழ்​செல்​வன் மற்​றும் சிகிச்சை பெற்ற 100-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் தங்​களு​டைய பெற்​றோர்​களு​டன் கலந்து கொண்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here