புதிய ஆசிரியர்கள் நியமனத்தால் தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்?

0
29

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் உள்ள காலி இடங்​களில், பள்ளி மேலாண்​மைக் குழு மூலம் நியமிக்​கப்​பட்ட தற்​காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வரு​கின்​றனர். குறிப்​பாக, பொதுத்​தேர்வு நடை​பெறும் 10-ம் வகுப்பு மற்​றும் பிளஸ்-2 வகுப்​பு​களுக்கு கூடு​தல் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டு, ஆசிரியர்கள் நியமிக்​கப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், டிஆர்பி மூலம் தேர்வு செய்​யப்​பட்ட முது​நிலை ஆசிரியர்கள், உடற்​கல்வி இயக்​குநர் மற்​றும் கணினி பயிற்​றுநர்​கள் என மொத்​தம் 1,996 பேருக்கு முதல்​வர் ஸ்டா​லின் பணி நியமன ஆணை​களை வழங்​கி, அவர்​கள் பணி​யில் சேர்ந்​துள்​ளனர்.

இதனால், 10 மற்​றும் 12-ம் வகுப்​பு​களுக்கு பாடம் எடுத்து வரும் தற்​காலிக ஆசிரியர்கள் விடுவிக்​கப்​படும் நிலை உள்​ளது. அடுத்த மாதம் பொதுத்​தேர்வு நடை​பெற உள்ள நிலை​யில், மாணவர்​களின் கல்வி பாதிக்​காத வகை​யில், தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என பெற்​றோர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

தேர்வு நேரத்தில்… இதுகுறித்து பெற்​றோர்​கள் கூறிய​தாவது: தற்​போது 1,996 ஆசிரியர்கள் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ள​தால், இவர்​கள் பணி​யில் சேர உள்ள இடங்​களில் பணிபுரிந்த தற்​காலிக ஆசிரியர்கள் விடுவிக்​கப்​படும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது. தேர்வு நேரத்​தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ள​தால், மாணவர்​களுக்கு புரிதல் ஏற்​படு​வ​தில் சிக்​கல் உண்​டாகலாம். மேலும், கவனச்​சிதறல் ஏற்​பட​வும் வாய்ப்​புள்​ளது.

பழைய ஆசிரியர்கள் கொடுத்து வந்த வழி​காட்​டு​தல்​களில் மாற்​றம் ஏற்​படும். முக்​கிய வினாத்​தாள்​கள், பாடக் குறிப்​பு​களைப் பின்​பற்​று​வ​தில் சிரமம் ஏற்​படும். இதனால், மதிப்​பெண் குறைய​வும் வாய்ப்​பு உள்​ளது.

எனவே, தற்​காலிக ஆசிரியர்​களுக்கு நடப்பு கல்​வி​யாண்டு முடி​யும்​வரை பணி நீட்​டிப்பு வழங்க வேண்​டும். புதிய ஆசிரியர் நியமனத்தை சில மாதங்​களுக்கு முன்​னரோ அல்​லது பொதுத்​தேர்​வுக்​குப் பின்​னரோ செய்​திருக்​கலாம்.

தேர்​தலை மையப்​படுத்தி தமிழக அரசு புதிய ஆசிரியர் நியமனத்​தில் தீவிரம் காட்​டியது தெரி​கிறது. எனவே, புதிய ஆசிரியர் நியமனத்​தால் மாணவர்​கள் பாதிக்​கப்​ப​டாத வகை​யில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு பெற்​றோர் தரப்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டது.

இதுகுறித்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர் தரப்​பில் கேட்​ட​போது, “பணி நியமனம் செய்​யப்​பட்​டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு வந்​ததும், அங்கு பணிபுரிந்த தற்​காலிக ஆசிரியர்கள் நீக்​கம் செய்​யப்​படு​வது வழக்​கம். தற்​போதைய சூழல் குறித்​து, அரசு​தான் முடி​வெடுக்க வேண்​டும்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here