சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

0
28

சென்னை சென்ட்​ரல் – கூடூர் மார்க்​கத்​தில் சூலூர்​பேட்டை யார்​டில் பொறி​யியல் பணி காரண​மாக, புறநகர் மின்​சார ரயில் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதன்​படி, சென்னை சென்ட்​ரல் – சூலூர்​பேட்​டைக்கு வரும் 19, 21 ஆகிய தேதி​களில் நண்​பகல் 12.10 மணிக்கு புறப்​படும் மின்​சார ரயில், எளாவூர்​-சூலூர்​பேட்டை இடையே பகுதி ரத்து செய்​யப்​படு​கிறது.

சூலூர்​பேட்டை – சென்னை சென்ட்​ரலுக்கு மேற்​கண்ட நாட்​களில் மதி​யம் 1.15 மணிக்கு புறப்பட வேண்​டிய மின்​சார ரயில், சூலூர்​பேட்டை – எளாவூர் இடையே பகுதி ரத்து செய்​யப்​படு​கிறது.

தாம்பரம் மெமு ரயில் சென்னை எழும்​பூர் – விழுப்​புரம் மார்க்​கத்​தில், மைலம் – திண்​டிவனம் இடையே பொறி​யியல் பணி காரண​மாக, தாம்​பரம் – விழுப்​புரம் மெமு பயணி​கள் ரயில் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​படு​கிறது.

அதன்​படி, தாம்​பரம் – விழுப்​புரத்​துக்கு வரும் 17, 19, 21 ஆகிய தேதி​களில் காலை 9.40 மணிக்கு புறப்​படும் மெமு பயணி​கள் ரயில், திண்​டிவனம் – விழுப்​புரம் இடையே பகுதி ரத்து செய்​யப்​படு​கிறது.

விழுப்​புரம் – சென்னை கடற்​கரைக்கு மேற்​கண்ட நாட்​களில் மதி​யம் 1.30 மணிக்கு புறப்​படும் மெமு பயணி​கள் ரயில், விழுப்​புரம் – திண்​டிவனம் இடையே பகுதி ரத்து செய்​யப்​படு​கிறது.

இத்​தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here