‘ஜெயிலர் 2’ உடன் மோதும் நானியின் ‘தி பாரடைஸ்’

0
25

தெலுங்கு நடிகர் நானி நாயக​னாக நடிக்​கும் திரைப்​படம் ‘தி பாரடைஸ்’. காந்த் ஒடேலா இயக்​கும் இப்​படத்​துக்கு அனிருத் இசை அமைக்​கிறார். இதில் மோகன் பாபு, ராகவ் ஜூயல், சம்​பூர்​ணேஷ் பாபு உள்​ளிட்ட பலர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். சி.​சாய் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படம் தெலுங்​கு, தமிழ் உள்பட 8 மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது.

இப்​படத்​துக்​காக நானி​யின் அறி​முக பாடல், ஹைத​ரா​பாத் அருகே தற்​போது படமாக்​கப்​பட்டு வரு​கிறது. நூற்​றுக்​கணக்​கான நடன கலைஞர்​களின் பங்​களிப்​புடன் பிரம்மாண்​ட​மான அரங்​கில் இப்​பாடல் உரு​வாக்​கப்​பட்​டு உள்ளது. இப்​பாடலுக்கு சுதன் நடனங்​களை வடிவமைத்துள்ளார்.

எஸ்​எல்வி சினி​மாஸ் சார்​பில் சுதாகர் செரு​குரி தயாரிக்​கும் இப்​படம், மார்ச் 26-ல் வெளி​யாகும் என அறிவிக்கப்பட்டிருந்​தது.

இந்​நிலை​யில், இதன் வெளி​யீடு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி ஆக. 21 அன்று வெளி​யாகும் என படக்​குழு அறி​வித்​துள்​ளது. இந்​நிலை​யில் நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கத்​தில் ரஜினி​காந்த் நடிக்கும் ‘ஜெ​யிலர் 2’ படமும் அதே தேதி​யில் வெளி​யாக இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here