இந்தியில் உருவான ஹாரர் த்ரில்லர் படம், ‘ராகினி எம்எம்எஸ்’. காமெடியுடன் கூடிய இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகிறது. இதற்கு ‘ராகினி 3′ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை சாஹிர் ராசா இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது.
இப்போது ஷஷாங்கா கோஷ் இயக்குவார் என்றும் சாஹிர் ராசா மேற்பார்வை செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஏக்தா கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. நடிகை தமன்னா, இந்தியில் உருவாகும் வி.சாந்தாராமின் பயோபிக் படத்தில் அவர் மனைவியாக நடித்து வருகிறார்.








