சுதா சேஷய்யன் உள்ளிட்ட 5 பேருக்கு ‘ராஜஸ்தானி தமிழ் சேவா’ விருதுகள்: நீதிபதி மகாதேவன் வழங்கினார்

0
22

தமிழகத்​தின் சமூக, கலாச்​சா​ரம் மற்​றும் கட்​டமைப்பு வளர்ச்​சிக்கு தங்​களது தன்​னலமற்ற சேவை​யால் சிறந்த பங்​களிப்பை வழங்​கிய தனி​நபர்​கள், நிறு​வனங்​களை கவுர​வித்து ‘ராஜஸ்​தானி – தமிழ் சேவா’ விருதுகளை ராஜஸ்​தானி அசோசி​யேஷன் தமிழ்நாடு வழங்கி வரு​கிறது.

இந்த ஆண்​டுக்​கான விருதுக்கு தமிழ்நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தர் சுதாசேஷய்​யன், மேற்கு மாம்​பலம் பொது சுகா​தார மையத் தலை​வர் சுவாமி நாதன் ஐசன்​ஹோவர், மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் தலைமை ஓது​வார் பி.சற்​குரு​நாதன், பயிர் அறக்​கட்​டளை தலை​வர் வி.ஆ​ரா​யி, வழக்​கறிஞர் கே.ஆர்​.​ராஜா ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

விரு​தாளர்​களை ‘துக்​ளக்’ஆசிரியர் எஸ்​.குரு​மூர்த்​தி, ‘இந்​து’ என்​.ர​வி, பரத​நாட்​டியக் கலைஞர் பத்மா சுப்​பிரமணி​யம், அண்ணா பல்​கலை. முன்னாள் துணைவேந்​தர் பால​குரு​சாமி, பகவான் மகாவீர் அறக்​கட்​டளை நிறு​வனர் சுகல்​சந்த் ஜெயின் ஆகியோர் அடங்​கிய நடு​வர் குழு தேர்வு செய்​திருந்​தது.

இந்​நிலை​யில், விருது வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. உச்ச நீதி​மன்றநீதிபதி ஆர்​.ம​காதேவன் தலைமை வகித்​து, விரு​தாளர்​களுக்கு ‘ராஜஸ்​தானி – தமிழ் சேவா’விருதுகள், ரூ.2 லட்​சத்​துக்​கான காசோலைகளை வழங்கி கவுர​வித்​தார்.

நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: எப்​படி வேண்​டு​மா​னாலும் பயணிக்​கக்​கூடியது வாழ்க்​கை. இதில் நமக்கு தேவை​யான அனைத்து வித​மான வசதி​களை​யும் தேடிக் கொள்​ளலாம். பதவி, பணம், கவுர​வத்​தால் நம்மை உயர்த்​திக் கொள்​ளலாம்.ஆனால், அனைத்​தும் ஒருநேரம் நம்​மை​விட்டு வில​கிச் செல்​லும்.

அவை அனைத்​தும் வில​கிய பின்​னால், நம் நிலைமை இது​தான் என்​பதை இன்றே உணர்ந்து பாருங்​கள் என்​று, தங்​களது செயல்​கள், வார்த்​தைகள், பேச்​சுகள், வாழ்க்கை முறை மூலம் நமக்கு எடுத்​துக்​கூறி, இந்த மண், மொழி, நாட்டை தங்​களது பணி​களால் சிறப்​பித்​துள்​ளனர் இந்த விரு​தாளர்​கள். இவர்​களை கவுர​விப்​ப​தன் மூல​மாக, இப்​படிப்​பட்ட பணி​கள் சிறக்க வேண்​டும் எனும் செய்​தியை ராஜஸ்​தானி அசோசி​யேஷன் பதிவு செய்​துள்​ளது என்று அவர் பேசி​னார்.

‘இந்​து’ என்​.ரவி பேசும்​போது, “ராஜஸ்​தானி மக்​கள் கல்​வி, மருத்​துவ சேவை மூலம் தமிழக வளர்ச்​சிக்​கும் தொண்​டாற்றி வரு​கின்​றனர். அந்த வகை​யில் தமிழ் சேவா விருதுகள் என்​பது, தமிழகத்​தின் சமூக கட்​டமைப்​பில் ராஜஸ்​தான் சமூகத்​தின் ஒருங்​கிணைப்பை வெளிப்​படுத்​தும் ஒரு முக்​கிய மைல்​கல் ஆகும்” என்​றார்.

விழா​வில் ராஜஸ்​தானி அசோசி​யேஷன் தமிழ்​நாடு தலை​வர் நரேந்​திர ஸ்ரீஸ்ரீமால், பொதுச் செய​லா​ளர் தினேஷ் போத்​தா​ரி, தமிழ் சேவா விருதுகள் குழுத் தலை​வர்​ அஜித்​ சோர்​டி​யா, அமைப்​பாளர்​ சிஏ அணில்​ கிச்​சா உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here