எண்ணூர் அருகே பாதி வழியில் நிறுத்தப்பட்ட மின்​ ரயில்

0
23

கும்​மிடிப்​பூண்டிக்கு சென்னையிலிருந்து நேற்று காலை 7.10 மணிக்கு மின்​சார ரயில் புறப்​பட்​டது. இந்த ரயில் எண்ணூர் – அத்​திப்​பட்டு இடையே சென்று கொண்​டிருந்​த​போது, உயர் அழுத்த மின்​பாதை​யில் இருந்து மின்​சா​ரத்தை பெறும் மடக்கு சாதனம் பழுதடைந்தது.

இதனால் ரயில் தொடர்ந்து செல்ல முடிய​வில்​லை. அதையடுத்து அங்​கேயே ரயில் நிறுத்​தப்​பட்​டது. இதுகுறித்து, ரயில்வே அதி​காரி​களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்​பேரில், ரயில்வே அதி​காரி​கள், பணி​யாளர்​கள் அங்கு விரைந்து வந்​து, பழுதை சரிசெய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இதனால், பின்​னால் வந்த மின்​சார ரயில்​கள் அடுத்த தண்​ட​வாளத்​தில் மாற்றி இயக்​கப்​பட்​டன. காலை 8.15 மணிக்கு பிறகு, மடக்கு சாதனத்​தில் ஏற்​பட்ட பழுது சரிசெய்​யப்​பட்​டது. வழக்​க​மான பாதை​யில் மின்​சார ரயில்​கள் தொடர்ந்து இயங்​கத் தொடங்​கின. இச்​சம்​பவத்​தால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here