சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் கன்டெய்னர் லாரி டிரெய்லர் கேபின் விழுந்த விபத்தில் ஓட்டுநர் சடலமாக மீட்பு

0
20

தூத்​துக்​குடி மாவட்​டம் கயத்​தார் அருகே உள்ள வானர​முட்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் கன்டெய்னர் லாரி ஓட்​டுநர் முத்​து​மாரியப்​பன் (36). இவர் தூத்​துக்​குடி துறை​முகத்​தில் கன்​டெய்​னரை இறக்​கி​விட்டு அடுத்த கன்​டெய்​னரை ஏற்​று​வதற்​காக சென்னை துறை​முகத்​துக்கு நேற்று முன்​தினம் அதி​காலை 3 மணி​யள​வில் வந்​தார்.

அந்​த​மானுக்கு சரக்கு ஏற்​றும் இடத்​தில் டிரெய்​லர் லாரியை ஓட்​டிச் சென்​ற​போது திடீரென முன்​பக்​கம் கேபின் (டிரைவர் கேபின்) உடைந்து அதனுடன் முத்​து​மாரியப்​பன் கடலில் தலைக்​குப்​புற விழுந்​தார். இதைக் கண்டு துறை​முக ஊழியர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.

உடனடி​யாக தீயணைப்​புத் துறைக்கு தகவல் தெரி​வித்​தனர். உடனே துறை​முகம் காவல் நிலைய போலீ​ஸார் மற்​றும் தீயணைப்​புப் படை வீரர்​கள் சம்பவ இடம் விரைந்​தனர். மேலும் இந்​திய கடற்​படை​யும் விரை​வாக ஒரு டைவிங் குழுவை அனுப்பி வைத்​தது.

அவர்கள் இணைந்து செயல்பட்டு கடலுக்​குள் பாய்ந்த டிரெய்​லர் கேபினை மீட்​கப்​பட்​டனர். தீவிர தேடு​தலுக்​குப் பிறகு முத்​து​மாரியப்​பன் சடல​மாக கண்​டெடுக்​கப்​பட்​டார். பின்​னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

இந்த விபத்து தொடர்​பாக துறை​முகம் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here