2-வது சிம்பொனி பற்றி இளையராஜா தகவல்

0
26

பிரபல இசை அமைப்​பாள​ரான இளையராஜாவுக்கு சிம்பொனி இசை அமைக்க வேண்​டும் என்​பது கனவாக இருந்​தது. ஒரே நேரத்​தில் பல்​வேறு இசைக்​கருவி​களை ஒன்​றிணைத்து உணர்ச்சி ததும்​பத் தரும் இசை சிம்பொனி.

அதன் தொடக்​க​மாக 1986-ம் ஆண்டு ‘ஹவ் டு நேம் இட்?’ என்ற இசை ஆல்​பத்தை அவர் உரு​வாக்​கி​னார். பின்​னர், ‘வேலியன்ட்’ என்ற தலைப்​பில் பாரம்​பரிய சிம்​பொனி இசையை இயற்​றிய இளை​ய​ராஜா, அதை லண்​டனில் நடத்​தி​னார்.

பின்​னர் சென்​னை​யிலும் அந்த சிம்​பொனி இசை நிகழ்ச்​சியை நடத்​தி​னார். இந்​நிலை​யில் 2-வது சிம்​பொனியை எழுதி முடித்​து​விட்​ட​தாக இளை​ய​ராஜா தெரி​வித்​துள்​ளார். இதுபற்றி அவர் கூறும்​போது, “புதிய ஸ்டூடியோவுக்கு வந்து பிப்​.3-ம் தேதி​யுடன், 5 ஆண்​டு​கள் நிறைவடை​கிறது. என்​னுடைய 2-வது சிம்​பொனியை​ பெரும்​பாலும் எழுதி முடித்​து​விட்​டேன்” எனக் கூறி​யுள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here