ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டியை கைது செய்ய வேண்டும்: அன்புமணி, அண்ணாமலை, விஜய் வலியுறுத்தல்

0
22

செய்​தி​யாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​திய ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டியை கைது செய்ய வேண்​டும் என்று அன்​புமணி, அண்​ணா​மலை, விஜய் ஆகியோர் வலியுறுத்​தி​உள்ளனர்.

கரூர் மாவட்​டம் கிருஷ்ண​ராயபுரம் பகு​தி​யில் விதி​களுக்​குப் புறம்​பாக செயல்​பட்ட கல்​கு​வாரி குறித்து செய்தி சேகரிக்​கச் சென்ற தனி​யார் செய்தி தொலைக்​காட்சி செய்​தி​யாளர், ஒளிப்​ப​தி​வாளர் மீது, எம்​எல்ஏ பழனி​யாண்டி மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் சரமாரி​யாகத் தாக்​கிய​தாக புகார்​கள் எழுந்​தன.

இது தொடர்​பான வீடியோ வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இது தொடர்​பாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

பாமக தலை​வர் அன்​புமணி: கனிம வளக் கொள்ளை நடப்​பதை அம்​பலப்​படுத்த முயன்ற செய்​தி​யாளர்​களை திமுக எம்​எல்ஏ பழனி​யாண்டி தாக்​கியதற்​கான வீடியோ ஆதா​ரங்​கள் வெளி​யாகி​யுள்​ளன. எனவே, பழனி​யாண்​டியை​யும், அவரது ஆதர​வாளர்​களை​யும் உடனடி​யாக கைது செய்ய வேண்​டும்.

தவெக தலை​வர் விஜய்: ஊடக​விய​லா​ளர்​கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்​எல்ஏ பழனி​யாண்டி நடத்​திய தாக்​குதல் கண்​டனத்​திற்​குரியது. அவர் மீது வழக்​குப் பதிவு செய்​து, உரிய நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். இப்​படிப்​பட்ட ஆட்​சியை மக்​கள், வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தூக்கி எறியப் போவது உறு​தி.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: ஊடக​விய​லா​ளர்​கள் மீது திமுக எம்​எல்ஏ பழனி​யாண்டி தாக்​குதல் நடத்​தும் வீடியோ மிகுந்த அதிர்ச்சி அளிக்​கிறது. பழனி​யாண்டி உள்​ளிட்ட அனை​வரையும் உடனடி​யாக கைது செய்ய வேண்​டும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here