பத்மஸ்ரீ விருது பெற்ற குரும்பர் ஓவியர் கிருஷ்ணனின் மகள் வாசுகி மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார்

0
17

நீல​கிரி மாவட்​டம் கீழ்​கோத்​த கிரியை சேர்ந்த ஆலு குரும்​பர் பழங்​குடி ஓவியர் கிருஷ்ணனுக்கு மத்​திய அரசு சமீபத்​தில் பத்மஸ்ரீ விருது அறி​வித்து பெரு​மைப்​படுத்​தி​யது.

இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயி​ரிழந்​தார். இவரது மனைவி சுசீலா, மேட்​டுப்​பாளை​யத்​தில் பாக்​குத் தோப்​பில் வேலை செய்​து, குடும்​பத்தை நடத்தி வரு​கிறார்.

கிருஷ்ணன்​-சுசீலா தம்​ப​தி​யின் மூத்த மகள் வாசுகி, தந்தை இறப்​புக்​குப் பிறகு கல்விக் கட்​ட​ணம் செலுத்த வழி​யின்​றி, படிப்பை நிறுத்தி விட்​டார். இதுகுறித்த செய்தி பத்​திரி​கை​களில் வெளி​யானது.

இதுகுறித்து தகவலறிந்த மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் உடனடி​யாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்​பத்​தினரை தொடர்பு கொண்டு பேசி​னார். மேலும், வாசுகி மீண்​டும் கல்​லூரி​யில் படிப்பைத் தொடர நடவடிக்கை மேற்​கொள்​ளும்​படி, நீல​கிரி ஆட்​சி​யர் லட்​சுமி பவ்​யா​விடம் அறி​வுறுத்​தி​னார்.

இதையடுத்​து, ஆட்​சி​யர் அறி​வுரை​யின் பேரில், நீல​கிரி மாவட்ட ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நல அலு​வலர் பீட்​டர் ஞான​ராஜ், ஓவியர் குடும்​பத்​தினரை நேரில் சந்​தித்​துப் பேசி​னார்.

ஊட்டி ஜெ.எஸ்​.எஸ். பார்​மஸி கல்​லூரி​யில் வாசுகி சேர்ந்​து, படிப்​பைத் தொடர நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது. இதன்​படி, வாசுகி நேற்று கல்​லூரி​யில் சேர்ந்து மீண்​டும் டி.​பார்ம் படிப்பை தொடங்கி உள்​ளார்.

இதுகுறித்து வாசுகி​யின் தாயார் சுசீலா கூறும்​போது, “எனது மகள் படிக்க நடவடிக்கை எடுக்க உதவிய பத்​திரி​கைகள், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் மற்​றும் மாவட்ட நிர்​வாகத்​துக்கு நன்​றி. எனது மகள் முழு​மை​யாக படிக்க அனைத்து உதவி​களை​யும் செய்​தால் பயனுள்​ள​தாக இருக்​கும்.

மேலும், எங்​களுக்கு 3 குழந்​தைகள் உள்​ளனர். அவர்​களின் கல்விக்​கான உதவி மற்​றும் நாங்​கள் குடி​யிருக்க அரசு சார்​பில் கோத்​தகிரி​யில் ஒரு வீடு கட்​டிக் கொடுத்​தால் மிகுந்த உதவி​யாக இருக்​கும்” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here