கொலை செய்யப்பட்ட பிஹார் குடும்பத்தினரின் உடல்களை சொந்த ஊர் கொண்டு செல்ல நடவடிக்கை: முதல்வர் உத்தரவு

0
16

கொலை செய்​யப்​பட்ட பிஹார் தம்​பதி மற்​றும் குழந்​தை​யின் உடல்​களை கட்​ட​ணமின்றி சொந்த மாநிலத்​தில் உறவினர்​களிடம் ஒப்​படைக்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

வேலை தேடி சென்னை வந்த, பிஹார் மாநிலம், ஷேக்​பூரா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கவுரவ் குமார், மனைவி புனிதா குமாரி, அவர்​களின் 2 வயது குழந்தை ஆகியோர் இங்கு அதே மாநிலத்​தைச் சேர்ந்த 3 பேரால் கொலை செய்​யப்​பட்​டனர்.

இதையடுத்து கொலையாளிகள் மூவரை​யும் போலீ​ஸார் கைது செய்தனர். கொலை செய்​யப்​பட்ட மூவரின் குடும்​பம் ஏழ்மை நிலை​யில் இருந்​த​தால், அவர்​களின் உடல்​களை அவர்​களது சொந்த மாநிலத்​துக்கு கொண்டு செல்ல உதவி தேவைப்​படு​வ​தாக தகவல் வெளி​யானது.

இதையறிந்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தமிழக சுகா​தா​ரத் துறை மூலம் எவ்​வித கட்​ட​ண​முமின்​றி, அவர்​களது உடல்​களை சொந்த மாநிலத்​துக்கு கொண்டு சென்று உறவினர்​களிடம் ஒப்​படைக்க உத்​தர​விட்​டுள்​ளார். அதன்​படி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here