டாஸ்மாக் பணியாளர்கள் இன்று குடும்பத்துடன் போராட்டம்

0
35

டாஸ்மாக் பணி​யாளர்​கள் இன்று குடும்​பத்​துடன் தலைமைச் செயல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்டம் நடத்​தவுள்​ள​தாக, தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் (ஏஐடி​யுசி) தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வரு​கின்​றன, இந்த கடைகளில் 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொகுப்​பூ​திய, ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

தொகுப்​பூ​திய, ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் அனை​வரை​யும் பணி நிரந்​தரம் செய்​து, அவர்​களுக்கு கால​முறை ஊதி​யம் வழங்க வேண்​டும். பணி நிறைவுக்கு பிறகு ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என கடந்த 15 ஆண்​டு​களாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

மேலும், காலி மது​பாட்​டில்​கள் திரும்​பப் பெறும் திட்​டத்தை டாஸ்​மாக் கடை பணி​யாளர்​களை கொண்டு செயல்​படுத்​தாமல் மாற்று திட்​டத்தை ஏற்​பாடு செய்ய வேண்​டும் என்பது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இது தொடர்​பாக, டாஸ்​மாக் நிர்​வாகம், அமைச்​சர் என பலமுறை பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றும் இந்த பிரச்​சினை​களுக்கு தீர்வு கிடைக்​க​வில்லை என டாஸ்​மாக் பணி​யாளர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

இந்​நிலை​யில், இன்று (3-ம் தேதி) சென்னை எழும்​பூரில் உள்ள டாஸ்​மாக் மேலாண்மை இயக்​குநர் அலு​வல​கத்​தில் இருந்து பேரணி​யாக சென்​று, தலைமைச் செயல​கம் முன் குடும்​பத்​துடன் முற்​றுகை போராட்​டத்​தில் ஈடு​பட​வுள்​ள​தாக, தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் (ஏஐடி​யுசி) தெரி​வித்​துள்​ளது.

இந்த போராட்​டத்​தில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் மற்​றும் முன்​னாள் மாநில செய​லா​ளர் முத்​தரசன் ஆகியோர் பங்​கேற்க உள்​ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here