அடுத்​தடுத்து உலகக் கோப்பையை இந்​திய அணி வெல்லும்: ரவி சாஸ்திரி நம்பிக்கை

0
49

அடுத்​தடுத்து உலகக் கோப்​பையை வெல்​லும் வாய்ப்பு இந்​திய கிரிக்​கெட் அணிக்கு உள்​ள​தாக இந்​திய அணி​யின் முன்​னாள் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரி தெரிவித்​துள்​ளார்.

இந்​திய கிரிக்​கெட் அணி வரும் 7-ம் தேதி தொடங்​க​வுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் பங்​கேற்​க​வுள்​ளது. இந்​நிலை​யில், வரும் உலகக் கோப்​பைப் போட்​டி​யில் இந்​திய அணி​யின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்​னாள் தலை​மைப் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரி​யிடம் நிருபர்​கள் நேற்று கேள்வி எழுப்​பினர்.

அதற்கு ரவி சாஸ்​திரி கூறிய​தாவது: இந்​திய அணி வீரர்​களின் தனிப்​பட்ட திறமை, தற்​போதைய ஃபார்ம், போட்​டிக்​கான தகு​தி, சமீப காலங்களில் அவர்​கள் விளை​யாடிய கிரிக்​கெட் போட்டிகளின் அளவு ஆகியவை அவர்​களைத் தெளி​வான வெற்றி வாய்ப்​புள்ள அணி​யாக மாற்​றி​யுள்​ளன.

குறிப்​பாக, அவர்​களின் முன்​னணி பேட்​டிங் வரிசையையும் அவர்​கள் இருக்​கும் சிறப்​பான ஆட்ட நிலை​யை​யும் பார்க்​கும்​போது இது உறு​தி​யாகிறது. எனவே, அடுத்​தடுத்து உலகக் கோப்​பையை வெல்​லும் வாய்ப்பு இந்​திய அணிக்கு உள்​ளது என்றே நான் நம்புகிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here