ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில், தமிழக முதல்வருக்கு பிப்.8-ம் தேதி நன்றி அறிவிப்பு விழா நடைபெறுகிறது.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வெ.சோமசுந்தரம், இரா.தாஸ், எஸ்.ஞானசேகரன் ஆகியோரின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) தமிழக முதல்வர் ஜன. 3-ம் தேதி அறிவித்தைத் தொடர்ந்து, சென்னை ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் பிப்.8-ம் தேதி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் வகையில் உரிமை மீட்பு மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, வரும் 31-ம் தேதி அன்று மாவட்டங்களில் வட்ட, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தை கூட்டவும், பிப். 2, 3, 4-ம் தேதிகளில் மாவட்டங்களில் நடைபெறும் பிரச்சாரத்தில் பங்கேற்பது என்றும், மாநாட்டை சிறப்பாக நடத்த 10 குழுக்கள் அமைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.


