ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் கால்பதித்தார் ஜன்னிக் சின்னர்!

0
70

ஆஸ்​திரேலிய ஓபன் டென்​னிஸ் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான ஜன்னிக் சின்னர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் நடப்பு சாம்பிய​னான மேடிசன் கீஸ் தோல்வி அடைந்​தார்.

ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 9-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரி​வில் 4-வது சுற்று ஆட்​டங்​கள் நடைபெற்றன. இதில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்​பியனு​மான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், 22-ம் நிலை வீர​ரான சக நாட்​டைச் சேர்ந்த லூசி​யானோ டார்​டெரியை எதிர்த்து விளை​யாடி​னார். 2 மணி நேரம் 9 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ஜன்​னிக் சின்​னர் 6-1, 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்னேறி​னார்.

5-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் லாரேன்சோ முசெட்​டி, 9-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டெய்​லர் ஃபிரிட்​ஸுடன் மோதி​னார். 2 மணி நேரம் 3 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் லாரேன்சோ முசெட்டி 6-2, 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றில் கால்பதித்​தார்.

லாரேன்சோ முசெட்​டி, ஆஸ்​திரேலிய ஓபன் தொடரில் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறு​வது இதுவே முதன்​முறையாகும். 8-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன் 3-6, 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்​கில் 12-ம் நிலை வீர​ரான நார்​வே​யின் காஸ்​பர் ரூடை வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் கால் பதித்​தார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் நடப்பு சாம்பியனும் 9-ம் நிலை வீராங்​க​னை​யு​மான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், சகநாட்​டைச் சேர்ந்த 6-ம் நிலை வீராங்​க​னை​யான ஜெசிகா பெகுலா​வுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். 1 மணி நேரம் 18 நிமிடங்​கள் நடைபெற்ற இந்த ஆட்​டத்​தில் ஜெசிகா பெகுலா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் மேடிசன் கீஸை வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் நுழைந்​தார்.

2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வியா டெக், தகுதி நிலை வீராங்​க​னை​யான ஆஸ்திரேலியாவின் மேடிசன் இங்​லிஷுசுடன் மோதி​னார். இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் எளி​தாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். மற்றொரு ஆட்​டத்​தில் 4-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் அமன்டா அனிசிமோ​வா, 46-ம் நிலை வீராங்​க​னை​யான சீனா​வின் வாங் சின்யுவை எதிர்கொண்​டார்.

ஒரு மணி நேரம் 42 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்டத்தில் அமன்டா அனிசிமோவா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்னேறி​னார். 5-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகினா 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 21-ம் நிலை வீராங்​க​னை​யான பெல்​ஜி​யத்​தின் எலிஸ் மெர்​டன்ஸை வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் நுழைந்தார்.

பாம்ப்ரி ஜோடி தோல்வி ஆடவர் இரட்​டையர் பிரிவு 3-வது சுற்​றில் இந்​தி​யா​வின் யுகி பாம்ப்​ரி, சுவீடனின் ஆந்த்ரே கோரன்​சன் ஜோடி 6-7 (7-9), 3-6 என்ற செட் கணக்​கில் பிரேசிலின் ஆர்​லாண்டோ லஸ், ரஃபேல் மாடோஸ் ஜோடியிடம் தோல்வி அடைந்​தது.

இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்​டங்​கள் ஆடவர் பிரிவில் இன்று நடை​பெறும் கால் இறுதி சுற்று ஆட்டங்களில் முதல் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், 6-ம் நிலை வீர​ரான ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மினாருடன் மோதுகிறார். அதேவேளை​யில் 3-ம் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் அலெக்​சாண்​டர் ஜிவேரேவ், 25-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் லர்​னர் டியனுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார்.

மகளிர் பிரி​வில் இன்று நடை​பெறும் கால் இறுதி சுற்று ஆடடங்​களில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரசின் அரினா சபலென்​கா, 29-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் இவா ஜோவிக்​குடன் மோதுகிறார். 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப், 12-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின்​ எலி​னா ஸ்விட்​டோலி​னா​வுடன்​ பலப்​பரீட்​சை நடத்​துகிறார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here