வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவை கைது செய்த அமெரிக்காவின் ஜனநாயக படுகொலையை கண்டித்து, நேற்று கிள்ளியூர் கிழக்கு வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தொடங்கி வைத்தார். முன்னாள் வட்டார செயலாளர் சாந்தகுமார், டிஒஎப்ஐ வட்டார செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.














