
அருமனை பகுதியை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் குமரி மாவட்ட தலைவர் ஜான் கிறிஸ்டோபர் (54) மற்றும் அவரது நண்பர் ஷஜி குமார் ஆகியோர் நேற்று உண்ணாமலை கடை பகுதியில் பைக்கில் சென்றபோது, சாலை நடுவில் நின்ற பசுமாட்டின் மீது மோதி படுகாயமடைந்தனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.













