தணிக்கை சிக்கலில் ‘ஜனநாயகன்’

0
209

‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கையில் பல்வேறு காட்சிகளை நீக்கவும், வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கின. இதனைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் கூறியிருக்கிறார்கள். இதன் பணிகளை முடித்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பவுள்ளது படக்குழு.

முக்கியமாக சண்டைக் காட்சிகளில் ரத்தம் தெறிப்பதை குறைக்கச் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பணிகள் இன்றுடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டமாக ‘ஜனநாயகன்’ ட்ரெய்லரை வெளியிடலாம் என்று படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கெளதம் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here