மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (21) என்பவர், பைக் திருடியதாக சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 9ஆம் தேதி வெளியே வந்தார். ஆனால், அடுத்த நாளே 10ஆம் தேதி பல்லன்விளை பகுதியில் மீண்டும் ஒரு பைக்கை திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நேற்று பம்மம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், விஷ்ணுவை திருடப்பட்ட பைக்கோடு கைது செய்தனர். பின்னர், அவரை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.














