குமரி – கேரளா எல்லையில் ஒற்றசேகரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பிளஸ் டூ மாணவி, நேற்று (டிசம்பர் 15) காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் வெள்ளறடை ஆற்றுப்பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், தேர்வு பயத்தால் இப்படி செய்ததாக மாணவி கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














