கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அருண் என்ற வாலிபர் செல்போன் பயன்படுத்தியபடி சொகுசு கார் ஓட்டி வந்ததால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பருவமழை காரணமாக கால்வாயில் அதிக நீர்வரத்து இருந்ததால், வாலிபர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்பகுதி மக்கள் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு காரை மீட்டனர். தொடர்ந்து இப்பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்துகள் ஏற்படுவதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














