குமரி: ரயிலில் தவறவிட்ட ரூ.2.82 லட்சம் மீட்பு: பயணிக்கு ஒப்படைப்பு

0
19

குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடியைச் சேர்ந்த ஆண்டனி, நேற்று கொல்லத்திலிருந்து புனலூர் மதுரை ரயிலில் இரணியல் வரை வந்துள்ளார். ரயிலில் இருந்து இறங்கியபோது, தனது பையை எடுக்க மறந்துவிட்டார். அந்தப் பையில் ரூ.2,82,500 ரொக்கம் இருந்தது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை அடுத்து, வள்ளியூர் ரயில் நிலையத்தில் அந்தப் பையை மீட்ட ரயில்வே அதிகாரிகள், ஆண்டனியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here