நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன்நகரில் நேற்று சாலையோரம் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை தவறான நோக்கத்தில் வீடியோ எடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜஸ்டின் பாபு (52) என்பவரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.














