தக்கலை: திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

0
20

தக்கலை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரகுநாத் வீட்டில் கடந்த மாதம் 18ஆம் தேதி 29 பவுன் நகைகள் மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது. தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏற்கனவே 4 பேரை கைது செய்த நிலையில், திருட்டில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த மாரி என்ற லட்சுமணன் பெருமாள் (26) என்பவரை நெல்லையில் வைத்து நேற்று கைது செய்தனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here