நாகர்கோவில் மணிமேடை பகுதியில் வடசேரி போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரவீன் (34) என்பதும், குமரியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. திருச்சி போலீசாரால் தேடப்பட்டு வந்த இவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தப்பி ஓடியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிரவீன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.














