பாலப்பள்ளம்: ஐஆர்இஎல் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்

0
19

மணவாளக்குறிச்சியில் உள்ள ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட கடமாங்குழி சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் நேற்று, 6-ம் தேதி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஐஆர்இஎல் துணை பொது மேலாளர் சிவராஜ் முன்னிலையில், கடமாங்குழி சேகர போதகர் தேவதாஸ் முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் கண் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மொத்தம் 447 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் 254 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here