மிடாலம் ஊராட்சி, உதயமார்த்தாண்டம் அரசு தொடக்க பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை கட்டிடங்கள் நேற்று திறக்கப்பட்டன. எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் இந்த கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் புனிதா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.














