தக்கலை பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணதாஸ் (36) கடந்த 1-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இரணியல் போலீசார் இது தொடர்பாக கிருஷ்ணதாஸின் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் முத்துலட்சுமி (60) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பவித்ரா ரமேஷ் என்பவருடன் உல்லாசமாக இருந்ததை கிருஷ்ணதாஸ் பார்த்ததால் கொலை நடந்ததாக தெரியவந்தது. இந்த கொலைக்கு உதவியதாக தாய் முத்துலட்சுமி மற்றும் மகள் பவித்ரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரமேஷ் மற்றும் விமல் ஆகியோரை தேடி வருகின்றனர்.














