கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரிசி வரவழைக்கப்படுகிறது. நேற்று திருச்சியில் இருந்து ரயில் மூலம் 1260 டன் அரிசி நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. இந்த அரிசி, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிக்கு அனுப்பப்பட்டு, தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்படும்.
            













