பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சிகம் லூவ்ரே.
கடந்த வாரம் கிரேன் ஒன்றின் உதவி மூலம், மியூசியத்தின் மேல்மாடி ஜன்னல் வழியாக நுழைந்த கொள்ளையர்கள் மன்னர் நெப்போலியன் காலத்து கிரீடம் மற்றும் பிரெஞ்சு ராணிகள் அணிந்த நெக்லஸ் உட்பட 8 விலை உயர்ந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இவற்றின் மொத்த மதிப்பு 102 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரீஸ் சிறப்பு படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.














