சூரியகோடு பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் சதீஷ்குமார் (39) நடைக்காவு பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலால் சிமெண்ட் கல்லால் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். கொல்லங்கோடு போலீசார் சதீஷ், சுனில், சோபகுமார், பிஜு, அனில் குமார் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்த நிலையில், குற்றவாளி சோபகுமார் குழித்துறை ஜேஎம் கோர்ட்டில் சரணடைந்தார். நீதிபதி அவரை 14 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.