15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 உதவியாளர்களுடன் தனி விமானத்தில் அமீரகம் சென்ற ஆப்பிரிக்க அரசரின் வீடியோ வைரல்

0
20

ஆப்​பிரிக்​கா​வின் தெற்கு பகு​தி​யில் உள்ள எஸ்​வாட்​டினி நாட்​டின் அரச பரம்​பரை​யில் வந்​தவர் மெஸ்​வாட்​டி-3. பரம்​பரை வழி அரச​ரான மெஸ்​வாட்டி, கடந்த ஜூலை மாதம் தனது 15 மனை​வி​கள், 100 உதவி​யாளர்​கள் புடைசூழ தனி விமானத்​தில் அபுதாபியில் வந்​திறங்​கி​னார். அங்கு அவருக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. தற்​போது அரச​ராக உள்ள மெஸ்​வாட்​டி​யின் தந்தை சோபு​சா-2-வுக்கு 125 மனை​வி​கள் என்ற விஷய​மும் தற்​போது தெரிய​வந்​துள்​ளது.

15 மனை​வி​களு​டன் அரசர் மெஸ்​வாட்டி வந்​திறங்​கிய வீடியோ அண்​மை​யில் வெளி​யானது. தற்​போது அந்த வீடியோ இணை​யத்​தில் வைரலாகி​யுள்​ளது. இந்​தப் பயணத்​தின் மெஸ்​வாட்​டி​யின் 30 குழந்​தைகளும் வந்​திருந்​தனர்.

அதே​நேரத்​தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் அரசர் மெஸ்​வாட்டி குறித்து அந்​நாட்டு மக்​கள் அதிருப்தி அடைந்​துள்​ளனர். எஸ்​வாட்​டினி நாட்​டில் மக்​கள் வாழ்​வா​தா​ரத்​துக்கே கஷ்டப்​பட்டு வரும் நிலை​யில் அவர் மட்​டும் 15 மனை​வி​கள், 30 குழந்​தைகள், 100 உதவி​யாளர்​களு​டன் தனி விமானத்​தில் வலம் வரு​வாரா என்று சமூக வலை​தளங்​களில் அந்​நாட்டு மக்​கள் கண்​டனம் தெரி​வித்து வரு​கின்​றனர். எஸ்​வாட்​டினி நாட்​டின் கடைசி அரச​ராக மெஸ்​வாட்​டி-3 உள்​ளார். இவர் அரசர் என்ற அந்​தஸ்தை கடந்த 1986-ம் ஆண்டு அடைந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here