நோய் எதிர்ப்புசக்தி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு

0
14

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கிய​வர்​களுக்கு விஞ்​ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினை​வாக ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு வென்​றவர்​கள் குறித்த அறி​விப்பு நேற்று முதல் வெளி​யிடப்​படுகிறது.

இந்த ஆண்​டுக்​கான மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசு அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ், ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்​தளிக்​கப்​படு​ம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ஸ்வீடனின் கரோலின்​ஸ்கா மையத்​தின் நோபல் குழு வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறிய​தாவது: அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ், ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர், உடலின் நோயெ​திர்ப்பு மண்​டலம் பற்றி ஆய்​வில் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்​களது கண்​டு​பிடிப்​பு​கள், புற்று நோய் மற்​றும் நோய்​ எ​திர்ப்​புசக்தி மூலம் சிகிச்சை அளிக்​கும் ஆராய்ச்​சிக்கு வழி​வகுத்​துள்​ளன.

உடலின் சக்​தி​வாய்ந்த எதிர்ப்பு சக்தி மண்​டலம், ஒழுங்​குப்​படுத்​தப்பட வேண்​டும். இல்​லை​யென்​றால், அது நமது உடல் உறுப்​பு​களையே தாக்​கும் என அவர்​கள் குறிப்​பிட்​டுள்​ளனர். இவர்​கள் நவீன நோய்​தடுப்​பாற்​றலை மாற்​றியமைத்​து, நோய் எதிர்ப்பு மண்​டலத்​தின் பாது​காவலர்​கள், ஒழுங்​கு​முறை டி செல்​கள் ஆகிய​வற்றை அடை​யாளம் கண்டு புதிய ஆராய்ச்​சிக்கு அடித்​தளமிட்​டுள்​ளனர். இந்த கண்​டு​பிடிப்​பு​கள், மருத்​துவ பரிசோதனை​கள் மூலம் மதிப்​பீடு செய்​யப்​படும் சிகிச்சை முறை​யின் வளர்ச்​சிக்கு வழி​வகுத்​துள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here