ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

0
18

ஜெய்ப்​பூரில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் ஏற்​பட்ட பயங்கர தீவிபத்​தில் சிக்கி 6 நோயாளி​கள் உயி​ரிழந்​துள்​ளனர். ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் சவாய்​மான் சிங் ​(எஸ்​எம்​எஸ்) அரசு மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கிறது. இந்த மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​களாக ஏராள​மானோர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யின் 2-வது மாடி​யில் உள்ள தீவிர சிகிச்​சைப் பிரி​வில் நேற்று முன்​தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. தீ மளமளவென மருத்​து​வ​மனை​யின் பிறபகு​தி​களுக்​கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்​சைப் பெற்று வந்த நோயாளி​கள், அவர்​களது குடும்​பத்​தினர் உடனடி​யாக அலறியடித்​துக் கொண்டு வெளியே ஓடிவந்​தனர்.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்​ததும் தீயணைப்​புத் துறை​யினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்​றனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீ அணைக்​கப்​பட்​டது. இந்த பயங்கர தீ விபத்​தில் சிக்​கி, அவசர சிகிச்​சைப் பிரி​வில் சிகிச்​சைப் பெற்று வந்த 2 பெண்​கள், 4 ஆண்​கள் உள்பட 6 பேர் உயி​ரிழந்​தனர்.

மேலும் 5 பேர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். அவர்​களுக்​குத் தகுந்த சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​வ​தாக மருத்​து​வ​மனை அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இந்த தீவிபத்​தில் சிக்கி தீவிர சிகிச்சை பிரி​வில் இருந்த விலை உயர்ந்த மருத்​துவ உபகரணங்​கள் எரிந்து நாச​மா​யின. தீ விபத்து குறித்து போலீ​ஸார் நடத்​திய முதல்​கட்ட விசா​ரணை​யில் மின்​கசிவு காரண​மாக விபத்து ஏற்​பட்​டிருக்​கலாம் என்று தெரிய​வந்​துள்​ளது.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்​ததும் ராஜஸ்​தான் மாநில முதல்​வர் பஜன்​லால் சர்​மா, மாநில அமைச்​சர்​கள் ஜோக​ராம் படேல், ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் மருத்​து​வ​மனைக்கு விரைந்து சென்று பார்​வை​யிட்​டனர். காயம் அடைந்​தவர்​களுக்கு முதல்​வர் பஜன்​லால் சர்மா ஆறு​தல் தெரி​வித்​தார். இந்த சம்​பவத்​தில்​ உயி​ரிழந்​தவர்​களுக்​கு பிரதமர்​ நரேந்​திர மோடி தனது எக்​ஸ்​ பக்​கத்​தில்​ இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here