14 கேள்விக்கு சரியாக பதில் அளித்து கோன் பனேகா குரோர்பதியில் ரூ.50 லட்சம் பரிசு பெற்ற விவசாயி

0
16

மகாராஷ்டிர மாநிலம் சத் ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத் தில் உள்ள பைத்தான் நகரை சேர்ந்தவர் கைலாஷ் குன் டேவர். தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சம் வென்றுள்ளார்.

இதுகுறித்து கைலாஷ் கூறிய தாவது: கடந்த 2018-ம் ஆண்டு ஹிங் கோலி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கோன் பனேகா குரோர் பதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். முகநூலில் அவரை பற்றிய விவரங்களை தெரிந்து கொண் டு. அவருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது, கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி உண்மைதான். உங் களுக்கு அறிவு இருந்தால் நிச்ச யம் பணம் சம்பாதிக்க முடியும் என்று அவர் கூறினார்.

அப்போதில் இருந்து நிறைய படிக்க ஆரம்பித்தேன். இன்று இந்த இடத்தில் இருக்கிறேன். கோன் பனேகா குரோர்பதியில் ரூ.50 லட்சம் பரிசு வென்றதை வார்த்தைகளால் சொல்ல முடிய வில்லை. என்னை போன்ற மனிதர்களுக்கு இதுபோன்ற பெரும் தொகையை கேட்பதே நம்ப முடியாததாக இருக்கும். கடுமையான முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. இந்த பணத்தை என்ன செய்வது என் பதற்கு முன்னர் அமைதியாக நிறைய யோசித்து முடிவெடுப் பபேன். இதில் எனது குழந் தைகளின் கல்வி முதலாவதாக இருக்கும். இவ்வாறு கைலாஷ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here