மார்த்தாண்டம் தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் போதைப் பொருள் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை களியக்காவிளை காவல் ஆய்வாளர் (பொ) வேளாங்கண்ணி உதயரேகா கொடியசைத்து துவக்கி வைத்தார். மார்த்தாண்டம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்லசுவாமி, திமுக நிர்வாகி அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். களியக்காவிளையில் தொடங்கிய பேரணி, திருத்துவபுரம், குழித்துறை வழியாக மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது.