ஒட்டோமான் ஆட்சியில் இருந்து எங்களை விடுவித்தது இந்திய வீரர்கள்தான்: இஸ்ரேலின் ஹைபா நகர மேயர் தகவல்

0
28

இஸ்​ரேலின் ஹைபா நகரில் இந்​திய வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தும் நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் பங்கேற்ற மேயர் இதுகுறித்து கூறிய​தாவது: வரலாற்று சங்​கத்தை சேர்ந்த ஒரு​வர் ஒரு நாள் என் வீட்டு கதவை தட்டி முழு​மை​யான ஆராய்ச்சி செய்த புத்​தகம் ஒன்றை வழங்​கி​னார். அதில், இந்த நகரத்தை ஒட்​டோ​மான்​களிட​மிருந்து விடு​வித்​தது ஆங்​கிலேயர்​கள் அல்ல, இந்​தி​யர்​கள் தான் என்​பதை ஆதா​ரங்​களு​டன் விளக்​கி​யிருந்​தார்.

ஆனால், அது​வரை இந்த நகரம் பிரிட்​டிஷ் வீரர்​களால்​தான் விடுவிக்​கப்​பட்​டது என்​ப​தாக எங்​களுக்கு தொடர்ச்​சி​யாக போ​திக்​கப்பட்டு வந்​தது. அப்​படிப்​பட்ட தீரம் மிகுந்த இந்​திய வீரர்​களுக்கு இங்கு அஞ்​சலி செலுத்​து​வது பெரு​மை​யாக உள்​ளது.

இனி வரலாற்​றுப் பாடப்​புத்​தகங்​களில் எங்​களை விடு​வித்​தது பிரிட்​டிஷ்​காரர்​கள் அல்ல, இந்​தி​யர்​கள்​தான் என்​பதை மாற்றி அச்​சிட நடவடிக்கை எடுத்து வரு​கிறோம்.

முதலாம் உலகப்​போரின்​போது, ஈட்​டி, வாள் உள்​ளிட்ட ஆயுதம் ஏந்​திய இந்​திய குதிரைப்​படை பிரிவு​கள், கார்​மல் மலை​யின் பாறை சரிவு​களில் இருந்து ஒட்​டோ​மான் படைகளை விரட்டி அடித்​தது. பெரும்​பாலான வரலாற்று ஆசிரியர்​கள் இதை ‘‘வரலாற்​றின் கடைசி மிகப்​பெரிய குதிரைப்​படை நடவடிக்​கை’’ என்றே அழைக்​கின்​றனர். இவ்​வாறு யாஹவ்​ தெரி​வித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here