பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி

0
27

பாகிஸ்​தானில் கார் குண்டு வெடித்​துச் சிதறிய​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். 32 பேர் படு​கா​யம் அடைந்​தனர். பாகிஸ்தானின் தென்​மேற்கு பகு​தி​யில் பலுசிஸ்​தான் மாகாணம் அமைந்​துள்​ளது. அந்த நாட்​டின் மொத்த பரப்​பள​வில் 44 சதவீதத்தை இந்த மாகாணம் கொண்​டுள்​ளது. கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் தனி நாடு​களாக உதய​மான​போது பலுசிஸ்​தானும் தனி நாடாக உரு​வெடுத்​தது. ஆனால் கடந்த 1948-ல் பாகிஸ்​தான் ராணுவம், பலுசிஸ்​தானை ஆக்​கிரமித்​தது.

அப்​போது​முதல் பாகிஸ்​தான் அரசுக்​கும் கிளர்ச்சி குழுக்​களுக்​கும் இடையே உள்​நாட்​டுப் போர் நடை​பெற்று வரு​கிறது. அந்த மாகாண மக்​கள் மிக நீண்ட கால​மாக தனி நாடு கோரி போராடி வரு​கின்​றனர். பாகிஸ்​தான் ராணுவ அடக்​கு​முறை​யில் இது​வரை லட்​சக்​கணக்​கான மக்​கள் கொல்​லப்​பட்டு உள்​ளனர்.

பலுசிஸ்​தானின் அண்டை மாகாண​மான கைபர் பக்​துன்​கவா பகுதி மக்​களும் பாகிஸ்​தான் அரசுக்கு எதி​ராக தொடர் போராட்டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அந்த மாகாணத்​தின் மாட்ரே தாரா கிராமத்​தின் மீது பாகிஸ்​தான் விமானப் படை அண்​மை​யில் குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் பொது​மக்​களில் 30 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்​துக்கு தகுந்த பதிலடி கொடுப்​போம் என்று தெஹ்ரிக் இ தலி​பான் பாகிஸ்​தான் (டிடிபி) எச்​சரிக்கை விடுத்திருந்தது.

இந்த சூழலில் பலுசிஸ்​தான் மாகாண தலைநகர் குவெட்​டா​வில் துணை ராணுவப் படை​யின் தலைமை அலு​வல​கத்தை குறி​வைத்து டிடிபி தற்​கொலைப் படை தீவிர​வா​தி​கள் நேற்று தாக்​குதல் நடத்த முயற்சி செய்​தனர். வெடிகுண்​டு​கள் நிரப்​பிய காரில் டிடிபி அமைப்பை சேர்ந்த 4 தீவிர​வா​தி​கள், துணை ராணுவ படை (எப்​.சி.) தலைமை அலு​வல​கம் நோக்கி விரைந்து சென்​றனர். இந்த கார் எப்​.சி. அலு​வல​கம் அருகே உள்ள பிர​தான சாலை​யில் வந்​த​போது வெடித்​துச் சிதறியது.

இதில் 13 பேர் உயி​ரிழந்​தனர். 32-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர். காரில் இருந்த 4 தீவிர​வா​தி​கள் உடல் சிதறி உயி​ரிழந்​தனர். அவர்​களது உடல்​களை அடை​யாளம் காண முடிய​வில்​லை. இதுகுறித்து பாகிஸ்​தான் அதிபர் ஆசிப் அலி ஜர்​தாரி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “டிடிபி தீவிர​வாத அமைப்பு குவெட்​டா​வில் தற்​கொலைப் படை தாக்​குதலை நடத்தி உள்​ளது. இந்த அமைப்பு இந்​தி​யா​வின் உத்​தர​வின்​படி செயல்​படு​கிறது” என்று குற்​றம் சாட்டி உள்​ளார்.

பாகிஸ்​தான் பாது​காப்​புப் படை வட்​டாரங்​கள் கூறும்​போது, “கு​வெட்​டா​வில் உள்ள துணை ராணுவ படை தலை​மையகத்​தின் மீது தாக்​குதல் நடத்த டிடிபி தீவிர​வா​தி​கள் திட்​ட​மிட்டு உள்​ளனர். ஆனால் அதற்கு முன்​பாகவே அவர்​களின் கார் வெடித்​துச் சிதறி​விட்​டது. டிடிபி தீவிர​வாத அமைப்பு மட்​டுமன்றி பலுசிஸ்​தான் விடு​தலைப் படை​யும் பாகிஸ்​தான்​ ராணுவம்​ மீதான தாக்​குதல்​களை தீவிரப்​படுத்​தி வருகிறது” என்​று தெரிவித்​தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here