ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தற்போது கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தந்தை லாலு, சகோதரர் தேஜஸ்வி உள்ளிட்டவர்களுடன், ரோஹிணி ஆச்சார்யாவுக்கு கருத்து வேறுபாடு என்ற ரீதியில் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ரோஹிணி கூறியதாவது: எனக்கு எந்தவித அரசியல் லட்சியங்களும் இல்லை. அதேபோல் மாநிலங்களவை எம்.பி. பதவியிலோ அல்லது எம்எல்ஏ பதவியிலோ எனக்கு விருப்பம் இல்லை. அதேபோல் என்னைச் சார்ந்தவர்களுக்காக நான் யாரிடமும் சீட் கேட்டு செல்லவில்லை. என்னைப் பற்றி கடந்த சில நாட்களாக தவறான செய்திகள் வருகின்றன. இதில் எதுவும் உண்மை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.