பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து

0
14

 அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் நேற்று முன்​தினம் வெளி​யிட்ட பதி​வில், “நேட்டோ நாடு​கள் குழு​வாக இணைந்து சீன பொருட்​கள் இறக்​குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்​டும். அப்​படிச் செய்​தால்​தான் ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அபாயகர​மான போரை முடிவுக்​குக் கொண்​டுவர முடி​யும் என நான் நம்​பு​கிறேன். ரஷ்​யா​விட​மிருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்​ணெய் வாங்​கு​கிறது. இதன் மூலம் கிடைக்​கும் பணத்​தில் ரஷ்யா, உக்​ரைன் மீது தாக்​குதல் நடத்​துகிறது. எனவே, கூடு​தல் வரி விதித்​தால் ரஷ்​யா​விட​மிருந்து எண்​ணெய் வாங்​கு​வதை சீனா நிறுத்​தி​விடும்’’ என கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், ஸ்லோவே னியா சென்​றிருந்த சீன வெளி​யுறவுத் துறை அமைச்​சர் வாங் யி, அந்​நாட்டு துணைப் பிரதமரும் வெளி​யுறவு மற்​றும் ஐரோப்​பிய விவ​காரங்​கள் துறை அமைச்​சரு​மான டன்ஜா பஜோனை சந்​தித்​துப் பேசி​னார். பின்​னர் லுப்​லி​யானா நகரில் வாங் யி கூறும்​போது, “வர்த்தக போரில் பங்​கேற்க சீனா விரும்​ப​வில்​லை. அமைதி பேச்​சு​வார்த்தை மூலம் பிரச்​சினைக்கு தீர்வு காண வேண்​டும் என்​பது​தான் சீனா​வின் விருப்​பம். சீனா​வும் ஐரோப்​பிய நாடு​களும் போட்​டி​யாளர்​களாக இல்​லாமல், நட்பு நாடு​களாக இருக்க வேண்​டும். மோதலுக்கு பதில் ஒருங்​கிணைந்​து செயல்​பட வேண்​டும்​’’ என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here