வில்லுக்குறி ஊராட்சியில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜீவா (31). இவரது கணவர் ஜோசப் ஜெயசிங். குழந்தைகள் இல்லை. ஜீவா பயிற்சிக்கு கடந்த 1 தேதி ஈரோடு சென்றுள்ளார். 2-ம் தேதி ஜோசப் ஜெயசிங் வீட்டிலிருந்து மாயமானார்.
ஜீவா பயிற்சியில் இருந்து அனுமதி விடுப்பு பெற்று வீட்டிற்கு வந்து பின் இரணியல் காவல் நிலையத்தில் 2ம் தேதி புகார் அளித்துள்ளார். நேற்று ஐக்கியான்குளத்தில் ஆண் பிணம் கிடந்துள்ளது. இரணியல் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். ஜீவா இறந்தவரின் உடலை கணவர் தான் என்று கூறியதின் பேரில் இரணியல் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














