இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (43). அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி ராதிகா (39). 12 மற்றும் 7 வயதில் மகன், மகள் உள்ளனர். நேற்று குழந்தைகளை டியூஷனுக்கு அனுப்பி விட்டு, ராதிகா சாலையின் இடது ஓரமாக நடந்து சென்றார். அப்போது வேகத்தில் வந்த பைக் ராதிகா மீது பயங்கரமாக மோதியது. இதில் சுமார் 50 அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்ட ராதிகா அங்கிருந்த கம்பவுண்ட் சுவர் மீது மோதி தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.













